
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயாரானது. அதில், ஏற்றுவதற்காக வந்த சரக்கு பார்சல்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, தண்டையார்பேட்டையில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்காக வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சலை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் 500 அரிய வகை நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. உடனே, பார்சலில் எழுதப்பட்டிருந்த முகவரியில் விசாரித்தபோது, அது போலியான முகவரி ...