
சென்னை: மத்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையர் ஏ.கே.நாயக் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், தொழிலாளர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்வார்கள். இதில் தொழிலாளர்களின் ஊதியம், ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் அவர்களுக்கான வேலை நேரம், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிலை உள்ளிட்ட எல்லா விவரங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்ய இதுபோன்ற ஆய்வுகளும், ஆய்வு தொடர்பான அறிக்கைகளும் பயன்படும். வங்கி தொழிலாளர்கள் வேலை ...