
துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதுவரையில் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து அக்கரை வரை அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள இருவழி பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. இனி, ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பாதை, இருவழி பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதனால், திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள், ஈஞ்சம்பாக்கத்துக்கு வந்ததும், மறுபுற ...