
சென்னை: நடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் காணாமல் போனதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா (22). இவர் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். அங்கு சுமார் 15 நிமிடம் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட அக்ஷிதா, பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்குள் சென்றதும் தனது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டின் அனைத்து பகுதிகளிலும் மோதிரத்தை தேடினார். எங்கு தேடியும் மோதிரம் ...