
சென்னை: சென்னை பெசன்ட் நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. பெசன்ட் நகர் மாதா கோயிலுக்கு பின்புறத்தில் உள்ளது ஓடைக்குப்பம். இந்த பகுதியில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். நள்ளிரவு 12 மணியளவில் ஒரு வீட்டில் தீ பிடித்துள்ளது. கடற்கரை காற்று வேகமாக வீசியதாலும், அதிக அளவிலான வீடுகள் ஓலை குடிசை வீடுகள் என்பதாலும், தீ மளமளவென அடுத்த வீடுகளுக்கும் பரவியது. வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து சிதறியது. ஆழ்ந்த துக்கத்தில் இருந்த மக்களுக்கு ...