
சென்னை : எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட நடிகர் மறைந்த பசி நாராயணன். இவரது மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இன்றி கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து பசி நாராயணன் மனைவி வள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.மேலும், இந்த 10 லட்சம் ரூபாயை வள்ளி பெயரில் `தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்’’ வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அந்த வைப்பு நிதியிலிருந்து ...