
சென்னை : தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் கம்பதாசன் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்க தலைவர் சேம.நாராயணன் தலைமை வகித்தார். ஈரோடு கந்தசாமி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ம.கணபதி வரவேற்றார். குமரிஅனந்தன், பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன், நடிகர் ஆர்.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். சங்க பொருளாளர் மகேசு கண்ணன் நன்றியுரை ஆற்றினார். விழா மேடையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைவர்கள் கையெழுத்திட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி ...