
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500, ரூ.400, ரூ.300 ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை. ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிப்படி 500 கடைகள் மூடப்படப்பட்டது. ஆனால் மூடிய கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தொடர் பணி வழங்குவது குறித்து தெளிவான திட்டமிடுதல் செய்யப்படவில்லை. அரசு தரப்பில் வெளிப்படையான செயல்திட்டம் அறிவிக்காத நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகவே மக்கள் ...