
திருவொற்றியூர் : வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராதை தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செல்லகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் நம்புராஜன், ராமகிருஷ்ணன், மனோகரன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கான சலுகை குறித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும், 40 சதவீத ஊனம் இருத்தாலே மாற்றுத்திறனாளியாக ...