
சென்னை: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் நேரடியாக ஆஜராகி தங்கள் வாதங்களை வைக்கவும், குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் வக்கீல்கள் சட்டப் பிரிவில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் மற்றும் வக்கீல் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கடந்த 60 நாட்களாக உண்ணாவிரதம், சாலை மறியல், மனித சங்கிலி மற்றும் நீதிமன்ற ...