
சென்னை: பல கோடி ரூபாய் சொத்துக்காக முன்னாள் கணவரை கடத்திய இளம்பெண் அவரை மீண்டும் திருமணம் செய்து சொத்துக்களை விற்றது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜன் என்பவரின் மகன் மனோஜ் ராஜன் கடத்தப்பட்டுள்ளதாக அவரை பராமரித்து வரும் ஆனந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதி பிரகாஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது வாய் பேச முடியாத, காது கேட்காத மனோஜ் ராஜன் கூடலூர் காப்பகத்தில் இருந்து கடத்தப்பட்டது குறித்தும் அவரது சொத்தை விற்பனை செய்தது குறித்தும் ...