
சென்னை: ஆழ்வார்பேட்டை வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நடிகர் கமலஹாசன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினார். நடிகர் கமலஹாசன் கடந்த மாதம் 14-ம் தேதி காலை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள மாடிப்படியில் இறங்கும் போது தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலிலும், முதுகுதண்டிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சிறிய அளவிலான அறுவை சிகிச்சை ...