
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் (திமுக) பேசியதாவது:கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின்போது வேளச்சேரி பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அடுத்த மழைக்கு முன் அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக அரசு எடுத்து, அப்பகுதி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். வேளச்சேரி தொகுதி 179வது வார்டில் ஒரு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தற்போது இது வேறிடத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பழைய இடத்தில் மீண்டும் ...