
சென்னை: சென்னையில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் 14 கட்டளைகளை கடைபிடிக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரகுப்பத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் நேற்று முன்தினம் சுரங்கப்பாதை அமைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் நகைக் கடை மற்றும் நகை அடகு கடை வைத்திருப்பவர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை 14 கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.அதன்படி, சென்னை மாம்பலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் நேற்று தி.நகர் ...