
சென்னை: பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி திமுக சார்ப்பில் போட்டியிட்டு, 79,455 வாக்குகள் பெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வாக்காளர்களுக்கு பணம் ...