
சென்னை: 125 வழக்கறிஞர்களின் சஸ்பெண்ட்டை இந்திய பார்கவுன்சில் முழுமையாக ரத்து செய்துள்ளது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதால் பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராடியதால் 125 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு பார் கவுன்சில் அறிக்கை திருப்தி அளித்ததால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து என விளக்கம் அளித்துள்ளனர். வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை கண்டித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்புப் ...