
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று காலை நரசிம்மர் சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள பல்வேறு புராதன திருக்கோயில்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலில் யோக நரசிம்மர், வரதாராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் அவற்றின் விமானங்களுக்கும், நரசிம்மன் கல்யாண மண்டபம், பாண்டிகோபுரம், நரசிம்மர் ...