
திருத்தணி: திருத்தணி காவேரிராஜபுரத்தில் தந்தை, மகனுக்கு டெங்கு அறிகுறி காணப்படுவதால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவன் ஒருவன் சீரியசாக உள்ளான். இதனால் ஊரை காலிசெய்துவிட்டு ஊர் மக்கள் வெளியேறி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சலுக்கு இந்த ஊரை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் பல சிறுவர்கள் உள்பட ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் ...