
சென்னை: தமிழக காவல்துறையினருக்கு ரூ.193 கோடியில் 71 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார். அதில் காவலர்களுக்கு இடர்படி, உடைகள் பராமரிப்பு படிகள் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். அப்போது, இரு துறைகளுக்குமாக 81 அறிவிப்புக்களை வெளியிட்டார். அவை வருமாறு: காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு, அவர்களது பதவி மற்றும் பணி பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.200லிருந்து ...