
சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் ரூ.50 கோடியில் மோட்டார் வாகன தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை கழகத்தில் ரூ.50 கோடியில் 5000 பேர் அமரும் வகையில் கூட்டரங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு ரூ.1.5 கோடியில் வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை அருகே அரசு கலைக் கல்லூரிசென்னை அருகே பெரும்பாக்கத்தில் அரசினர் கலைக் கல்லூரி ரூ.8.48 கோடியில் ...