
சென்னை : உற்பத்தி செய்யும் தங்க நகைகள் மீது 1 சதவீதம் கலால் வரியை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதனால், சவரனுக்கு ரூ.250 வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலால் வரி விதிக்கப்பட்டால் விற்பனை பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு தங்க நகை மீது விதித்துள்ள 1 சதவீத கலால் வரியை திரும்ப பெற வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள நகைக்கடைக்காரர்கள் மார்ச் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாட்களுக்கு தொடர் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் ஸ்டிரைக் தொடங்கியது. நாடு முழுவதும் 8 லட்சம் ...