
சென்னை : எஸ்.வி.எஸ். மருத்துவக்கல்லூரியில் 3 மாணவிகள் மர்மமாக இறந்த வழக்கில் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரம் கல்லூரி நிர்வாகிகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கியது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பங்காரத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில் அடிப்படைவசதிகள் கேட்டு போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், சித்த மருத்துவம் 2-ம் ஆண்டு படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மாணவிகள் கல்லூரியின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து சடலங்களாக ...