சென்னை: கடத்தப்படும் குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஏன் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி ழுப்பியுள்ளது. குழந்தைகள் கடத்தலை தடுக்கக் கோரி நிர்மல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கடத்தப்படும் குழந்தைகள் விலங்குகள் போல் நடத்தப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆள்கடத்தல் தடுப்பு பிரிவில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தவதாக போலீஸ் தரப்பில் கூறிய பதிலை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். ...
↧