
சென்னை : சென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடந்தது. அவரது மகனிடம் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை மேயர் சைதை துரைசாமியின் வீடு சைதாப்பேட்டை சிஐடி நகர் மெயின் ரோட்டில் உள்ளது. அவரது மகன் வெற்றியின் வீடு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் மெயின் ரோட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அதிரடியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இந்த சோதனை நடந்தபோது மேயர் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றி ஆகியோர் இருந்தனர். இந்த ...