
சென்னை : மாயமான ஏஎன்-32 விமானத்தை ஆராய்ச்சி கப்பல் உதவியுடன் அதில் உள்ள தானியங்கி வாகனம் மூலம் தேட உள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். சென்னை தாம்பரத்தில் இருந்து கடந்த ஜூலை 22ம் தேதி அந்தமான் சென்ற விமானப்படை ஏஎன்-32 ரக விமானம் நடுவானில் திடீரென காணாமல் போனது. விமானம் மாயமாகி இன்றுடன் 54 நாட்கள் ஆகிறது. சென்னையில் இருந்து சுமார் 150 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் அந்த விமானம் காணாமல் போனது. விமானத்தில் விமானிகள், பெண் அதிகாரி, ராணுவ வீரர்கள் உள்பட 29 பேர் பயணித்தனர். விமானம் மாயமாகி ஒன்றரை மாதம் ஆகியும் அதுகுறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அதில் ...