
சென்னை : வங்கக் கடலில் கடந்த வாரம் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று தஞ்சாவூரில் 30 மிமீ மழை பெய்துள்ளது. வலங்கைமான், கொடவாசல், சிதம்பரம், விருதாசலம், திருவாரூர், பாபநாசம், நீடாமங்கலம் ஒரத்தநாடு 10 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஆந்திரா, தெலங்கானா, வட கர்நாடகா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் ...