
சென்னை : அண்ணாவின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15ம் தேதி அவரது சிலைக்கு கருணாநிதி மாலை அணிவிக்கிறார். இது குறித்து திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணியினர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர் அணி ...