
சென்னை : பக்ரீத் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு பிரியாணி விருந்து படைத்தனர். தியாகத்தைப் போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வாசல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.சென்னை பிராட்வே ...