
சென்னை : போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த 3 எஸ்ஐக்கள், மது குடித்ததால், அவர்களை எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட பல்வேறு பதவிகளுக்கு 1000க்கு மேற்பட்டோர் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறுபவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மது அருந்துவதாக, அகாடமி எஸ்பி சாமுண்டீஸ்வரிக்கு தொடர்ந்து புகார் சென்றது. இதையடுத்து கடந்த 11ம் தேதி எஸ்பி மற்றும் அதிகாரிகள், அகாடமியில் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். ...