
சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் கர்நாடகாவில் தமிழக வாகனங்கள், கடைகள் மற்றும் தமிழர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், தமிழகத்தில் கன்னடர்கள் நடத்தும் ஓட்டல், அவர்களின் வாகனங்கள் மற்றும் கர்நாடக வங்கி ஆகியவற்றின் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இரு மாநில பஸ்களும், மாநில எல்லையில் கடந்த 10 நாளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இடையில் ஓரிரு நாள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச ...