
சென்னை : புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகளுக்காக கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நேற்று முதல் பேசின்பாலத்திலேயே நிறுத்தப்படுவதால் சென்ட்ரல் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை சென்ட்ரல்-பேசின்பாலம் இடையே 5, 6வது ரயில்பாதை அமைக்கும் பணியால் கடந்த மாதம் 23ம் தேதி முதல் வரும் அக்.7ம் தேதி வரை சென்ட்ரல் வழியாக வந்து செல்லும் ரயில்கள் பெரம்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையம் வந்து செல்லும் மின்சார ரயில்களின் போக்குவரத்தும் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், அரக்கோணம் ...