
சென்னை : பல்வேறு ஐயங்கள் எழுவதால் ராம்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமதாஸ் (பாமக): தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு புழல் மத்திய சிறையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது ஏற்கத்தக்கதல்ல. லாக் அப்களிலும், சிறைகளிலும் உயிரிழப்பது தடுக்கப்பட வேண்டும். ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் அதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். வைகோ (மதிமுக): ...