
சென்னை : சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வீட்டில் நடத்திய சோதனையில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஏராளமான சொத்து ஆவணங்கள், விலைக்கு வாங்கப்பட்ட பல கம்பெனிகள் குறித்த ஆவணங்கள் சிக்கியுள்ளன. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மேயர் சைதை துரைசாமியின் சிஐடி நகர் வீடு, சேலையூர் மாடம்பாக்கத்தில் உள்ள மகன் வெற்றியின் வீடு, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடு உட்பட 40 இடங்களில் கடந்த 12ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 2 பேரின் வீட்டில் இருந்து ஏராளமான ...