
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டில் குடிநீர் வழங்கல் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டில் உள்ள சிவன் படை வீதி, நேரு நகர், கிரியப்பா நகர் போன்ற பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் பைக்குகளில் ...