
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, முதல்வர் ஜெயலலிதா, உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இது கண்டனத்திற்குரியது. கொலையாளியை விரைந்து கைது செய்ய வேண்டும். அதே வேளையில் கொலைக்கான காரணம் தெரியாத நிலையிலும், அதற்கான விசாரணை நடைபெறாத நிலையிலும் இக்கொலையை குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக திசை திருப்பும் சதித்திட்டம் கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.எனவே தமிழக அரசும், காவல்துறையும் ...