
சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று தஞ்சாவூரில் 100 மிமீ, செங்கல்பட்டு 80 மிமீ, நன்னிலம், மாமல்லபுரம், செட்டிக்குளம் 60 மிமீ, அரியலூர், வலங்கைமான், பாபநாசம், திருவாடணை, காஞ்சிபுரம், அரக்கோணம் 50மிமீ, கொடுமுடி, வால்பாறை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, காவேரிப்பாக்கம், செந்துறை 40 மிமீ, ...