
சென்னை : ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிருக்கு போராடி வருகிறது. நீலகிரி தெற்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் கடந்த 1ம்தேதி 2 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தை புலியை மீட்டனர். ஊட்டி மான் பூங்காவில் உள்ள விடுதியில் வைத்து சிகிச்சையளித்தனர். ஆனால் அந்த சிறுத்தை புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாததால் வண்டலூரில் ...