
சென்னை: பயணிகள் நெரிசலை தவிர்க்க சேலம், காட்பாடி, பெரம்பூர் உட்பட தமிழகம் வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொச்சுவேலியில் இருந்து அக்.9, 16, 23, 30, நவ.6 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு புறப்படும் பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06336) புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.இந்த ரயிலில் 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிக் கொண்ட பெட்டிகளும், 6 ...