
சென்னை: கடந்த 2014 மார்ச் 31ம் தேதி ராயபுரம் சிமெட்ரி சாலையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதியின்றி மின் இணைப்பு பெற்றதாக திமுக முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி மற்றும் கோபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பழனி மற்றும் கோபி சார்பில் வக்கீல்கள் ஜி.வேலு, பாலாஜி ஆகியோர் ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. சாட்சியளித்த ...