
சென்னை : மண்ணடி ெசல்லமுத்து லேன் பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (21). கல்லூரி மாணவரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பன் வாகத் அலியை தனது பைக்கில் அமர வைத்து பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேப்பியர் பாலம் அருகே சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதை கவனிக்காத முகமது ஆசிப் பைக்கில் மின்னல் வேகத்தில் வந்துள்ளார். அப்போது தடுப்பில் பயங்கரமாக பைக் மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முகமது ஆசிப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். ...