
சென்னை : சென்னை நொச்சி நகரில் கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சுனாமி திட்டத்தின் கீழ் 628 புதிய குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது குடியிருப்பின் கீழ் பகுதியில் அங்கு வசிக்கும் மீனவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக 30 கடைகளும் கட்டப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 2011ம் ஆண்டு அக்கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற காழ்ப்புணர்ச்சியால் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கடைகள் யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இதனால் கடைகள் வீணாகி வந்தது.இந்த நிலையில் மேலும் ஒரு ...