
சென்னை : பேரிடர் காலங்களில் வான் மற்றும் கடல் மார்க்க வழிகளை துல்லியமாக கணக்கிடுவதற்கும், ராணுவம், தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் ஐஆர்என்எஸ்எஸ் 1 எப் அதிநவீன செயற்கைக்கோள் இன்று மாலை 4 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி - சி32 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. கடல் மற்றும் வான் போக்குவரத்து ஆராய்ச்சி தொடர்பாக நேவிகேஷன் வகையில் அதி நவீன 7 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2013ம் ஆண்டு முடிவு செய்தது. இந்த செயற்கைக்கோள்கள் கடல் போக்குவரத்து ஆராய்ச்சி, ராணுவம், ...