
சென்னை : கொடைக்கானலில் மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3 நாளில் நஷ்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் மற்றும் பான்ட்ஸ் எச்.எல்.எல். பாதரச நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது: இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் பல்வேறு விதமான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது வாரிசுகளும் பல்வேறு உடல் நலக்குறைபாடுகளுடன் உள்ளனர். இந்த நிலையில், பாதரச தொழிற்சாலை 2000-ம் ஆண்டு மூடப்பட்டது. ...