
திருவொற்றியூர், : மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி, திருவொற்றியூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோயம்பேடு - வண்ணாரப்பேட்டை வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வடசென்னை மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், ₹3,770 கோடி செலவில், 9 கி.மீ. தூரத்திற்கு வண்ணாரப்பேட்டையில் இருந்து கல்லறை சாலை, தியாகராயா கல்லூரி, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயிலை தடத்தை ...