
சென்னை, : எர்ணாகுளத்தில் இருந்து கோவை, காட்பாடி என தமிழ்நாடு வழியாக மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு பலமடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து மார்ச் 15, 22, 29 தேதிகளில் காலை 8.50மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(02854) மறுநாள் நள்ளிரவு 11 மணிக்கு ஹவுரா சென்றடையும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்டது. பாலக்காடு. கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர் உட்பட பல்வேறு ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ...