
புழல், : புழல் சூரப்பட்டு அருகே சண்முகபுரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாமரைகுளத்தை ஆளுங்கட்சியினர் துணையுடன் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக செயல்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி 24வது வார்டுக்குட்பட்ட சூரப்பட்டு அருகே சண்முகபுரம் உள்ளது. இங்குள்ள சமுதாயக் கூடம் அருகே அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்து நீரை சில ஆண்டுகளுக்கு முன் வரை பாசனத்துக்கும், குடிநீருக்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி ...