
இயற்கை பேரிடர்கள், கடல்சார் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாயவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் செவ்வாய் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் மூலமாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1எப் என்ற செயற்கைகோள் ஏவப்படுகிறது. 320 டன் எடையும், 44.4மீ உயரமும் கொண்ட இந்த செயற்கைகோள் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 284 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும் இதன் ...