
ஆலந்தூர்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆலந்தூர் 165வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.கே. சாலையில் நேற்று மாலை ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதற்கான விண்ணப்பங்களை சிலர் பொதுமக்களிடம் கொடுத்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.இதுபற்றி, திமுக வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி வனிதா தலைமையில் போலீசார் ...