
சென்னை: ஸ்ரீவைகுண்டம் அணை யில் 50 நாட்களுக்குள் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 300 மீட்டர் அகலம் கொண்ட தடுப்பணை 144 ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அணை 300 மீட்டர் அகலம் கொண்டது. பல ஆண்டுகளாக இந்த அணை தூர்வாரப்படாமல் இருந்தது. இதனை தூர்வார உத்தரவிடக்கோரி வக்கீல் ஜோயல், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்தடுத்த ...