
சென்னை: 2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 5 ஆண்டுகளில் நிர்ணயித்ததை விட ஒட்டு மொத்த திட்ட செலவு ரூ.2.31 கோடி என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும் நாட்டிலேயே பொருளாதாரத்தில் 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது என அவர் தெரிவித்தார். மொத்தம் ரூ.60,610 கோடி ஒதுக்கீடு2016-2017-ம் ஆண்டு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.60,610 கோடி உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு ரூ.2 கோடியும், புதுமை முயற்சி திட்டங்களுக்கு ரூ.150 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது ...